×

விழுப்புரம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விழுப்புரம் அருகே சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் இன்று (16.07.2023)- அதிகாலை 05.00 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் லட்சுமி (வயது 45) க/பெ. வல்லத்தான் மற்றும் மோதியதில் கோவிந்தம்மாள் (வயது 50) க/பெ. கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். கெங்கையம்மாள் (45) க/பெ. அஞ்சாபுலி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (வயது 45) க/பெ. ராமலிங்கம், கேமலம் (வயது 46) க/பெ. மூர்த்தி, பிரேமா (வயது 45) க/பெ. நாகராஜ் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் , பலத்தகாயமுற்ற நாயகம் அவர்களுக்கு ரூ.1 லட்சமும் லேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறபட்டுள்ளது.

 

The post விழுப்புரம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief President of the Chief of the Year ,Vilappuram ,G.K. ,Stalin ,Chennai ,Chief Minister ,Chennai-Puducherry East Coast Road ,Chief President of the CM ,G.K. Stalin ,
× RELATED விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும்...