×

விழுப்புரத்தில் சாலைவிபத்தில் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் சாலைவிபத்தில் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “விழுப்புரம் மாவட்டம், சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் இன்று (16.07.2023) அதிகாலை 05.00 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் லட்சுமி (வயது 45) க/பெ. வல்லத்தான் மற்றும் கெங்கையம்மாள் (45) க/பெ. அஞ்சாபுலி என்பவர் மருத்துவமனையில் கோவிந்தம்மாள் (வயது 50) க/பெ. கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (வயது 45) க/பெ. ராமலிங்கம், கேமலம் (வயது 46) க/பெ. மூர்த்தி, பிரேமா (வயது 45) க/பெ. நாகராஜ் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த
காயமுற்ற நாயகம்க்கு 1 லட்சம் ரூபாயும், இலேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரத்தில் சாலைவிபத்தில் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vilupupuram ,Chief Minister ,Mukhiya G.K. Stalin ,Chennai ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...