×

லாலாப்பேட்டை அருகே பரபரப்பு அரசு பள்ளி பூட்டு உடைத்து புத்தகம், ஆவணங்கள் எரிப்பு: ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை

ராணிப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே குமணந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகம், ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அடுத்த குமணந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பள்ளியை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு வெளியே புத்தகங்கள் எரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததோடு பீரோவில் வைத்திருந்த பள்ளி புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்து வந்து வெளியே போட்டு தீ வைத்து எரித்தது தெரியவந்தது. முன்னதாக மின் மீட்டர் பெட்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதனைதொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர், அடிக்கடி இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து குமரேசனை பிடித்து சிப்காட் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post லாலாப்பேட்டை அருகே பரபரப்பு அரசு பள்ளி பூட்டு உடைத்து புத்தகம், ஆவணங்கள் எரிப்பு: ஒருவரை பிடித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lalapettai ,Ranipet ,Kumanandangal Government Primary School ,Lalappet ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...