×

கொள்ளிடம் பகுதியில் மணல் லாரிகளால் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் மணல் லாரிகளில் இருந்து கிளம்பும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்திலிருந்து புத்தூர் வரை நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றி வரும் லாரியிலிருந்து மணல் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். குன்னம் கிராமத்தில் வழியே மணல் லாரிகள் வந்து செல்லும்போது காற்றில் மணல் பரந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.

சாலையிலும் மணல் பரந்து படிந்து விடுகிறது. அப்போது அடுத்தடுத்து வரும் வாகனத்தினால் மீண்டும் மீண்டும் சாலையில் மணல் புகை மூட்டம் போல் பறந்து வருகிறது.அப்பகுதியில் உள்ளவர்கள் சிரமமடைந்துவருகின்றனர்.எனவே சாலையில் அடிக்கடி தண்ணீர் தெளிப்பதன் மூலம் மணல் பரந்து செல்வதை தடுக்க முடியும். எனவே தற்போது சாலையில் தண்ணீர் தெளித்து வரும் இதே முறையை பின்பற்றி தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் தெளித்து பொதுமக்களுக்கு இடையூறு இன்றி லாரிகள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து குன்னம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நரசிம்மன் கூறுகையில்,குன்னம் கிராமத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது.

இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி சென்று வருகிறது. மணல் ஏற்றி செல்லும் லாரியில் மேல் பகுதியில் மூடாமல் திறந்த நிலையில் வருவதால் அதிக அளவில் மணல்கள் சாலையில் சிதறிக் கிடைக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் நலனைை கருத்தில் கொண்டு காற்றில் மண் பறக்காத அளவுக்கு சாலையில் தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்க இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

The post கொள்ளிடம் பகுதியில் மணல் லாரிகளால் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mayaladuthurai District ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்