×

புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய கோயில் நில மோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை

புதுச்சேரி, ஜூலை 16: புதுச்சேரி, காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிபிசிஐடி வழக்குபதிந்து ஏற்கனவே 13 பேரை கைது செய்தனர். போலி ஆவணம் பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமியும் சிறையில் அடைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியில் உள்ளார். இதனிடையே இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய மாவட்ட பதிவாளரான ரமேஷ், வட்டாட்சியரான பாலாஜி ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர். நீண்ட விடுப்பில் அவர்கள் சென்ற நிலையில் 2 பேரிடம் இருந்த பொறுப்பு மாற்று அதிகாரிக்கு ஒதுக்கி புதுவை அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்களை கைது செய்ய சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையே இந்த மோசடியில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வரும் நிலையில் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் இவ்விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் புதுச்சேரியில் நடந்த கமாட்சியம்மன் கோயில் நில பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் தற்போது வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வரும் 19ந்தேதி புதன்கிழமை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில், காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த மோசடியில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

The post புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய கோயில் நில மோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Puduvai ,Puducherry ,Kamatshyamman Temple ,Rainbow City ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...