×

பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாட்டம்

பெரம்பலூர்,ஜூலை16: முன்னாள் முதல்வர் காமராசரின் பிறந்தநாள் மற்றும் கல்விவளர்ச்சி நாளை முன்னிட்டு பெரம்பலூர் அரியலூர் சாலையில் சாந்தம் நகரில் உள்ள கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது.விழாவில் பள்ளியின் நிறுவனர் மற்றும் சேர்மன் முனைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவியும், ஆலம்பாடி ஊராட்சி மன்ற தலைவருமான கல்பனா சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி மாணவர் களுக்கு பேச்சுப்போட்டி, மாற்றுடைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுஅதில் வெற்றி பெற் ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை கிறிஸ்டியன் கல்வி நிறுவன இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

The post பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur Christian Metric Higher School ,Perambalur ,Chief Minister ,Kamarasar ,Ariyalur Road ,Shantham Nagar ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...