×

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் இந்தியாவிற்கு ஆதரவாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானோர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதகரத்தின் மீது காலீஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இது குறித்த வீடியோ காட்சியை கடந்த 2ம் தேதி காலீஸ்தான் ஆதரவாளர்கள் டிவிட்டரில் பதிவிட்டனர். ஒரே மாதத்தில் தூதரகத்தின் மீது நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவமாகும். இந்நிலையில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், காலீஸ்தான் ஆதரவாளர்களுக்கு தங்களது எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சான்பிரான்சிஸ்கோவில் இந்திய வம்சாவளியினர் நேற்று அமைதி பேரணி நடத்தினார்கள். இதில் சான்பிரான்சிஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.

The post காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி appeared first on Dinakaran.

Tags : rally in ,America ,San Francisco ,India ,San Francisco, ,Dinakaran ,
× RELATED அரியலூரில் இணைய சேவை விழிப்புணர்வு பேரணி