×

கர்நாடகாவில் போதிய மழை பெய்யவில்லை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது: மண்டியா எம்பி சுமலதா திட்டவட்டம்

மண்டியா: கர்நாடகாவில் குறைவான அளவே மழை பெய்துள்ளதால், கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் குறைந்துவருகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று எம்பி சுமலதா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு ஜூன் – ஜூலை மாதங்களில் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. ஆனால் கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று மண்டியா எம்பி சுமலதா தெரிவித்துள்ளார். மண்டியாவில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி சுமலதாவிடம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய எம்பி சுமலதா, ‘தீர்ப்பாயத்தின்படி நீர்ப்பங்கீடு தொடர்பாக சில விதிகள் உள்ளன. ஆனால் தற்போது கர்நாடகாவில் மழை மிகக்குறைவாகவே பெய்திருப்பதால், கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 2 மாதங்களுக்கு போதுமான குடிநீர் மட்டுமே உள்ளது. விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும். விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் குடிநீருக்கே பிரச்னை ஏற்படும். எனவே தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரியப்படுத்துவோம்’ என்று எம்பி சுமலதா தெரிவித்தார்.

The post கர்நாடகாவில் போதிய மழை பெய்யவில்லை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது: மண்டியா எம்பி சுமலதா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka, Tamil Nadu ,Mandya ,Karnataka ,KRS Dam ,Tamil Nadu ,Mandia MP Sumalatha ,
× RELATED பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை