×

தண்ணீருக்காக மோட்டார் ஆன் செய்தபோது அதிர்ச்சி எரிமலை போல 10 அடி உயரம் தீயை கக்கும் ஆழ்துளை கிணறு: ஆந்திராவில் மக்கள் பீதி; அதிகாரிகள் ஆய்வு

திருமலை: ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமைாளர் மோட்டார் சுவிட்ச் ஆன் செய்தார். அப்போது, 30 அடி வரை தண்ணீரும், 10 அடி உயரத்திற்கு தீயை கக்கியது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்த போது 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி கைவிடப்பட்ட காஸ் பைப் லைன் இருப்பதாகவும், இது பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள நிலையில் இதில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறினர். அதிகாரிகள் ஆய்வில் ஆழ்துளை கிணறு மொத்தம் 280 அடியில் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். மேலும் பூமிகடியில் இருந்து இயற்கையாக வெளியேறிய காஸ் தீயை கக்கியது தெரியவந்தது. இதையடுத்து மண் ஆகியவற்றை நிரப்பி ஆழ்துளை கிணற்றை மூடினர்.

The post தண்ணீருக்காக மோட்டார் ஆன் செய்தபோது அதிர்ச்சி எரிமலை போல 10 அடி உயரம் தீயை கக்கும் ஆழ்துளை கிணறு: ஆந்திராவில் மக்கள் பீதி; அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumalai ,Andhra State, ,Ambedgarh Gonaseema District Rajolu Zone Shivakod ,Borewell ,Andhra ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...