×

ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில் ஆர்.கே.சுரேஷ் டிவிட்டர் பதிவால் பரபரப்பு

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடியில் தொடர்புடைய பாஜ நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், துபாயில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அண்மையில் அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன மோசடி விவகாரத்தில் தொடர்புடைய பாஜ நிர்வாகி, நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ், ரூ.15 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கிலிருந்து மோசடி பேர்வழிகளை காப்பாற்றுவதாக கூறி ரூசோ என்பவரிடமிருந்து பெரும் பணத்தை ஆர்.கே.சுரேஷ் பெற்றது உறுதியானது.

மேலும், திருச்சி எல்பின் நிதி நிறுவன மோசடியிலும் ஆர்.கே சுரேஷ்க்கு தொடர்பு இருக்கிறதா என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, சுரேஷின் கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது ஆர்.கே சுரேஷை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்பின் நிதி நிறுவன மோசடியில் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியானதை அடுத்து. தனது டிவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று நாகப்பாம்பின் புகைப்படத்தை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 6 மாத காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் நாகப்பாம்பு படத்தை வெளியிட்டு இருந்தார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அழித்தும் உள்ளார். துபாயில் ஆர்.கே.சுரேஷ் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஆர்.கே சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தை, எந்த இடத்தில் இருந்து இயக்குகிறார் என்பது குறித்து விசாரணையை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த டிவிட்டர் பதிவை செல்போன் அல்லது கணினியை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். கணினியின் ஐபி முகவரி அல்லது செல்போன் சிக்னல் ஆகியவை எங்கு உள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்யை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஆருத்ரா கோல்ட் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில் ஆர்.கே.சுரேஷ் டிவிட்டர் பதிவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : R.R. K.K. Suresh ,twitter ,Chennai ,Baja ,R.R. ,K.K. Suresh ,Dubai ,K.K. ,Dinakaran ,
× RELATED மாற்று இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் டிடிவி கோரிக்கை