×

செல்பி எடுக்க முயன்ற போது அனன்யாவின் ரசிகரை தள்ளிவிட்ட பாதுகாவலர்

மும்பை: நடிகை அனன்யாவுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை, அவரது பாதுகாவலர் தள்ளிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ேநற்று மாலை மும்பையின் ஓர் கடையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ரசிகர்கள் சிலர், நடிகையுடன் செல்பி புகைப்படம் எடுக்கச் சுற்றிலும் கூடினர். திடீரென ஒரு ரசிகர், அனன்யாவின் அருகே சென்றார். அதிர்ச்சியடைந்த அனன்யாவின் பாதுகாவலர், செல்பி எடுக்க முயன்ற ரசிகரை கோபத்துடன் தள்ளிவிட்டார். ஆனால், இதை கவனித்த அனன்யா, அந்த ரசிகரிடம் புகைப்படம் எடுக்க அனுமதித்தார்.

அதற்காக சிறிது நேரம் நின்றுவிட்டு சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் கலவையான பதில்களை பெற்று வருகிறது. அதில் ஒருவர், ‘நடிகையின் பாதுகாவலருக்கு சல்யூட்’ என்றும், மற்றொருவர் பதிவிட்ட பதிவில், ‘தீய நோக்கத்துடன் அந்த நபர் நடிகையை அணுகினாரா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் எதற்காக பாதுகாவலர் அவரை தள்ளிவிட்டார்?’ என்று பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

The post செல்பி எடுக்க முயன்ற போது அனன்யாவின் ரசிகரை தள்ளிவிட்ட பாதுகாவலர் appeared first on Dinakaran.

Tags : Ananya ,Mumbai ,Bollywood ,
× RELATED போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா...