×

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: கடலூரில் இன்று முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் 10,000 மேற்பட்டோர் வேலை நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவ ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பின் பலகட்ட பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று இரவு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கடலூர் மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பூமா காவல்துறை அதிகாரிகள், என்.எல்.சி. அதிகாரிகள் ஆகியோர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. தொழிற்சங்கத்தின் கோரிக்கை எட்டப்படவில்லை எனில் ஏற்கனவே அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: கடலூரில் இன்று முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : N.L.C. ,Cuddalore ,Neyveli ,Dinakaran ,
× RELATED நெய்வேலியில் பரபரப்பு காவல் நிலையம்...