×

மராட்டிய அமைச்சரவை விரிவாக்கத்தை அடுத்து சரத்பவார் இல்லத்துக்கு சென்ற அஜித் பவாரால் அரசியலில் பரபரப்பு..!!

மும்பை: மராட்டிய அமைச்சரவை விரிவாக்கத்தை அடுத்து துணை முதலமைச்சர் அஜித் பாவார் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்துக்கு சென்றதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏ களுடன் விலகிய பிறகு முதல் முறையாக அஜித் பாவார் சரத்பவாரின் இல்லத்துக்கு சென்றுள்ளார்.

அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பிய சரத்பவாரின் மனைவி உடல் நலம் பற்றி விசாரிக்கவே அஜித் பாவார் சென்றதாக அவருடைய கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக அஜித் பாவார் தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்கள் பிரபைல் படேல், சகன் பூஜ்வால், சுனில் தட்கரே ஆகியோர் கட்சியின் பெருமளவு எம்.எல்.ஏ களுடன் கடந்த 2ம் தேதி ஆளும் சிவசேனா பாஜக கூட்டணியில் இணைந்தனர்.

இதனை அடுத்து அஜித் பாவார் துணை முதலமைச்சராகவும் அவரது அணியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். அதை தொடர்ந்து நிதி, நீர்வளம் உள்ளிட்ட முக்கிய துறைகளை தேசியவாத காங்கிரஸ் கோரிவந்தது. இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்க துறைகள் ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இருப்பினும் அஜித் பாவார் அணி துறைகளை பெறுவதில் பிடிவாதம் காட்டியதுடன் அஜித் பாவார் பிரஃபில் படேல் ஆகியோர் கடந்த 13ம் தேதி இரவு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை அடுத்து இரண்டு வார இழுவரைக்கு பிறகு அஜித் பாவாருக்கு நிதி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் அவரது ஆதரவு அமைச்சர் 8 பேருக்கும் கல்வி, வேளாண், கூட்டுறவு, விளையாட்டு உள்ளிட்ட முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

The post மராட்டிய அமைச்சரவை விரிவாக்கத்தை அடுத்து சரத்பவார் இல்லத்துக்கு சென்ற அஜித் பவாரால் அரசியலில் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ajit Pawar ,Sarath Pawar ,Maratha Cabinet ,Mumbai ,Deputy ,Chief Minister ,Nationalist Congress ,President ,Sharad Pawar ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு...