×

ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை எண்ணெய் பனை செடி நடவு விழா

*தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண் ணெய்- எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை செடி நடவு விழா ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

திருவாரூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு தேசிய சமையல் எண்ணெய் – எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 8 ஹெக்டர் அளவில் புதிய பரப்பு விரி வாக்கம் கொண்டுவரப்பட்டது அது போன்று இவ்வருடமும் தேசிய சமையல் எண்ணெய்- எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 20 ஹெக்டர் அளவில் இல க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விலக்கினை 75 சதவீதம் சாதனை அடைய முயற்சிக்கும் வகையில் இந்த மாபெரும் எண்ணெய் பனை நடவு விழா தொடங்கப்பட உள்ளது.

எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது ஒரு ஹெக்டருக்கு 20 இலிருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறு வடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 16 ஆயிரத்தில் இரு ந்து 18 ஆயிரம் வரை அரசே அங்கீகரித்த கோத்ரேஜ் அக்ரோவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுவதனால் விவசாயிகளு க்கு விற்பனை செய்வதில் சிரமம் இன்றி கையாள முடிகிறது.

இந்த எண்ணெய் பனை நடவு செய்வதற்கு தேவையான மண் வகை, களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி பயிர் செய்ய ஏற்றதாகும். இம்மாபெரும் எண்ணை பனை நடவு விழாவில் முக்கிய பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தற்போது இவ்விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் பயனாளிகள் இதற்கு தேவையான ஆவணங் களான கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, பண்ணை வரைபடம் மற்றும் ஆதார் நகல் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் மாபெரும் எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலக தோட்டக் கலை உதவி இயக்குனர் திவ்யா 9600720070 மன்னார்குடி, நீடாமங்கலம் மற் றும் கோட்டூர் வட்டாரத்திற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்திய ஜோதி 9500567619 என்ற எண்ணிலும், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரத்திற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச் செல்வம் 9659651859 என்ற எண்ணிலும், திருவாரூர் மற்றும் நன்னிலம் வட் டாரத்திற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜனனி 9599859687 என்ற எண்ணிலும், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்திற்கு இளவரசன் 9585874567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை எண்ணெய் பனை செடி நடவு விழா appeared first on Dinakaran.

Tags : Oil Palm Plantation Festival ,Deputy Director ,Mannargudi ,Department of Horticulture and Hill Crops ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED கர்ப்பிணிகள் தனியாக வெயில் நேரத்தில்...