×

சந்திராயன்-3 சந்திரனில் தரையிறங்க வேண்டி திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

திருவையாறு, ஜூலை 15: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திங்களூரில் உள்ள கைலாச நாதர் கோயிலில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்க வேண்டி திருவையாறு அருகே திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திங்களூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சந்திர பகவான் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். தோஷ நிவர்த்திக்காக இங்குள்ள சந்திரனை கைலாசநாதர் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்வெளியில் ஆய்வு நடத்திட சந்திராயன் -3 என்ற விண்கலம் ஹரிகோட்டாவிலிருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்க வேண்டி, தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில், திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சந்திரனுக்கு சந்திர பிரதி என்ற சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்திரனுக்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சந்திராயன்-3 சந்திரனில் தரையிறங்க வேண்டி திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Tingalur Kailasanathar temple ,Thiruvaiyaru ,Kailasa Nath temple ,Dingalore ,Tiruvaiyaru ,Thanjavur ,Chandrayaan-3 ,Kailasanath temple ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா