×

யுஎஸ் ஓபன் பேட்மின்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து

கவுன்சில் புளூஃப்ஸ்: யுஎஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றார். 2வது சுற்றில் தைவானின் யுன் சுவ் சுங்குடன் மோதிய சிந்து 21-14, 21-12 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 37 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செக் குடியரசின் ஜான் லுடாவை எதிர்கொண்ட இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-8, 23-21 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி 39 நிமிடங்களுக்கு நீடித்தது.

மற்றொரு 2வது சுற்றில் களமிறங்கிய இந்திய வீரர் சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.காலிறுதியில் சங்கர் முத்துசாமி – லக்‌ஷயா சென் மோதவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் அரையிறுதிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கக் கிடைக்கும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post யுஎஸ் ஓபன் பேட்மின்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து appeared first on Dinakaran.

Tags : US Open Badminton ,PV Sindhu ,India ,BV Sindhu ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...