×

அதிகத்தூர் கிராமத்தில் வீட்டு குளியல் அறையில் செல்போனில் படம் பிடிப்பு: தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல், தலைமறைவான வாலிபருக்கு வலை

திருவள்ளூர்: அதிகத்தூர் கிராமத்தில் வீட்டு குளியல் அறையில் செல்போன் வைத்து படம் பிடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமு மூர்த்தி. இவரது மனைவி ஆஷா(39). இவர், கடந்த 8ம் தேதி ஆஷா வீட்டின் குளியல் அறையில் காலை குளிக்க சென்றார். அப்போது, குளியலறை ஜன்னலில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அந்த செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

அது, ஆஷா வீட்டுக்கு எதிர் வீட்டை சேர்ந்த குமார் மகன் ஹரிஹரன் (எ) வசந்த் (23) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து ஆஷா அங்கு சென்று கேட்டபோது ஹரிஹரன் (எ) வசந்த் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் வயிற்றில் எட்டி உதைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வசந்த் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆஷா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், தனது வீட்டு குளியல் அறையில் செல்போன் வைத்து வீடியோ எடுக்க முயன்ற நபரை தட்டி கேட்டதற்கு தாக்கிய ஹரிஹரன் (எ) வசந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆஷா கடம்பத்தூர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஹரிஹரன் (எ) வசந்த் மீது குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து கடம்பத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அதிகத்தூர் கிராமத்தில் வீட்டு குளியல் அறையில் செல்போனில் படம் பிடிப்பு: தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல், தலைமறைவான வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Adhikathur village ,Kadambathur… ,Achithur village ,
× RELATED கடம்பத்தூர் ஒன்றியத்தில் வாக்கு...