×

ரோட்டரி சி3 ஹாலில் இன்னர்வீல் சங்க நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடலூர், ஜூலை 15: கடலூர் இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் தேவனாம்பட்டினம் ரோட்டரி சி3 ஹாலில் நடைபெற்றது. கடலூர் இன்னர்வீல் சங்கத்தின் நூற்றாண்டின் தலைவியாக கீதா பிறையோன் பொறுப்பேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விமலா, மாவட்ட சேர்மன் தேவி, துணை தலைவர்களாக மணிமாலா, முன்னாள் தலைவி வனிதா, செயலாளராக சுப, பொருளாளராக லதா, ஐஎஸ்ஓ ஆக விஜயலட்சுமி பதவியேற்று கொண்டார்கள்.

முன்னாள் ரோட்டரி மாவட்ட கவர்னர் விக்னேஸ்வரா பாலிடெக்னிக் இயக்குனர் பிறையோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கலையரசி ராமதாஸ், எமல்டா ஜோ வேதநாயகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் இக்நைட் முதியோர் இல்லத்தில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது. ஊனமுற்ற பெண்ணுக்கு டேபிள் டாப் தையல் மெஷின், குட்டியான்குப்பம் அரசு நடுநிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சீருடை, கல்வி உதவித்தொகை 3,000 ரூபாய் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. கடலூர் முன்னாள் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் கருணாகரன் ,ஏர்டெல் ரவி, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரோட்டரி சி3 ஹாலில் இன்னர்வீல் சங்க நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Innerwheel Sangha ,Rotary C3 Hall ,Cuddalore ,Inner Wheel Sangh ,Inner ,Wheel ,Sangh ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு