×

புற்றுநோய் அபாயம் சர்ச்சையைத் தொடர்ந்து பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்தியது ஜான்சன் அண்ட் ஜான்சன்: உரிமத்தை அரசிடம் ஒப்படைத்தது

மும்பை: உலக புகழ் பெற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியானது தனது மும்பை ஆலையில் டால்கம் பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்துவிட்டது. மாறாக சோளமாவில் பேபி பவுடர் தயாரிக்க முடிவு செய்துள்ளது. டால்கம் பேபி பவுடர் தயாரிப்பதற்தான உரிமத்தையும் மகாராஷ்டிரா அரசிடம் ஒப்படைத்துவிட்டது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர், இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பிரபலமாக உள்ளது. டால்கம் பவுடர் மக்னீசியம், சிலிகான் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் புற்று நோய் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனிக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரால் புற்றுநோய் வராது என்று கம்பெனி வாதிட்டது. பல ஆய்வு கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தாங்கள் இதை கூறுவதாக அந்த கம்பெனி அறிவித்தது. இந்த நிலையில் பேபி பவுடரில் அஸ்பட்டாஸ் சேர்த்தால் புற்று நோய் வரும் என்று அமெரிக்க புற்று நோய் சொசைட்டி அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜன்சன் கம்பெனி டால்கம் பேபி பவுடர் தயாரிப்பதை 2020ம் ஆண்டே நிறுத்திவிட்டது. அதற்கு பதில் சோள மாவில் பேபி பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில், மும்பையில் உள்ள ஆலையிலும் டால்கம் பேபிபவுடர் தயாரிப்பை ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி நிறுத்திய விட்டது. தயாரிப்பதற்கான உரிமத்தை அந்த கம்பெனி மகாராஷ்டிரா அரசிடம் தந்துவிட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விட்டதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பேபி பவுடர் தயாரிப்பை ஏன் நிறுத்தினார்கள் என்று காரணம் சொல்ல வேண்டிய அவசியம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். ஜூன் மாதம் 22ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட பேபி பவுடரை சந்தையில் விற்கவும் அதிகாரிகள் அனுமதி தந்துள்ளனர். இதனிடையே, 2020 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்தியது போல அதே ஆண்டில் இந்தியாவிலும் உற்பத்தியை நிறுத்தியிருக்க வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாஜி கமிஷனர் மகேஷ் ஜகடே தெரிவித்தார்.

The post புற்றுநோய் அபாயம் சர்ச்சையைத் தொடர்ந்து பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்தியது ஜான்சன் அண்ட் ஜான்சன்: உரிமத்தை அரசிடம் ஒப்படைத்தது appeared first on Dinakaran.

Tags : Johnson & Johnson ,MUMBAI ,Johnson & Johnson Company ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!