×

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில் துவரம் பருப்பு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அமுதம் அங்காடியில் தக்காளி: சென்னையில் 7 அமுதம் அங்காடிகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் 7 நியாயவிலை கடைகளிலும் நேற்று முதல் தக்காளி கிலோ ஒன்றிற்கு ரூ.60க்கும், துவரம் பருப்பு அரை கிலோ ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு அரை கிலோ ரூ.60க்கும் விற்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

The post தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில் துவரம் பருப்பு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Chakrapani ,CHENNAI ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...