×

கரூர் வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது

கரூர்: கரூர் வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர். கடந்த11ம் தேதி வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. 8ம் வகுப்பு மேல் படிப்பை தொடராமல் இருந்த 4 பேரை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மேல் உள்ள கோபத்தில் குடிநீர் தொட்டியில் கெமிக்கலை கலந்ததாக சிறார்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கரூர் வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Karur Veeranampatti Government Panchayat School ,Karur ,Karur Veeranapatti Government Panchayat School.… ,Karur Veeranapatti Government Panchayat School ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை