×

சந்திராயன் 3 விண்கலத்தின் மாதிரி மணல் சிற்பம்: பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைப்பு

ஒடிசா: ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரியை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்தது பயில்வான் ராக்கெட் 40 நாள் பயணத்துக்குப் பின் சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடையும். சந்திரயானின் முதல் கட்டம் பூமியிலிருந்து புறப்பட்டு சுற்றுவட்ட பாதையை அடைவது இரண்டாவது கட்டமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சந்திரயான் விலக ஆரம்பிக்கும். 2-வது கட்டத்தில் நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணப்பட்டு சந்திரயான்-3 நிலை கொள்ளும். மூன்றாவது கட்டத்தில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ளும்.

இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரியை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் 500 சில்வர் பாத்திரங்களை கொண்டு 22 அடி நீள மணல் சிற்பத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தின் கீழ் வெற்றி உணர்வு என்ற பொருள்படும் விஜயீ பாவ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ ஏவப்பட்ட நிலையில் அதனை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பம் பலரையும் கவர்ந்துள்ளது.

The post சந்திராயன் 3 விண்கலத்தின் மாதிரி மணல் சிற்பம்: பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைப்பு appeared first on Dinakaran.

Tags : 3 ,Sudarshan Patnaik ,Odisha ,Sudarsan Patnaik ,Chandrayaan 3 ,
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்