×

ஆந்திராவில் கடும் எதிர்ப்பு எதிரொலி; பெண்கள் மாயமானதில் ஒட்டுமொத்த தன்னார்வலர்களையும் குற்றம் சாட்டவில்லை: நடிகர் பவன்கல்யாண் திடீர் ‘பல்டி’

திருமலை: ஆந்திராவில் ெபண்கள் மாயமானதற்கு தன்னார்வலர்களை குற்றம்சாட்டிய நடிகர் பவன்கல்யாண் நேற்று திடீரென அனைத்து தன்னார்வலர்களையும் குற்றம் சாட்டவில்லை என்று பல்டி அடித்துள்ளார். ஆந்திர சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் கடந்த 2 வாரங்களாக `வாராகி யாத்திரா’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த கூட்டங்களில் முதல்வர் ஜெகன்மோகன் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆந்திராவில் அரசு நியமித்த தன்னார்வலர்களால் சுமார் 30 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் என்றும், தன்னார்வலர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் தொடர்பு உள்ளது எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.இவரது பேச்சுக்கு ஆந்திர அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தன்னார்வலர்களும் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் பவன் கல்யாணின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் மாநில மகளிர் ஆணையம் சார்பில் நடிகர் பவன்கல்யாணுக்கு ேநாட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடம் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன்கல்யாண் பேசுகையில், பெண்கள் மாயமாவதற்கு ஒட்டுமொத்த தன்னார்வலர்கள்தான் காரணம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. சில கிராம பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களையும், ஆதரவற்ற பெண்களையும் நலத்திட்ட உதவியை ரத்து செய்வதாக மிரட்டி சில தன்னார்வலர்கள் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களைவிட தன்னார்வலர்களுக்கு குறைவான ஊதியம் தரப்படுகிறது. அவர்களில் பலர் பட்டதாரிகளாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதுமானதாக இருக்குமா என்பதை ெஜகன்மோகன் சிந்திக்க வேண்டும்.

ஆந்திராவில் மாதந்தோறும் பென்ஷன் வாங்கும் பெண்கள் குறித்த தகவல்களை ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவன பீல்டு ஆபரேஷன் ஏஜென்சியிடம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் விளக்கம் அளிக்கவேண்டும்’ என்றார்.கடந்த சில நாட்களாக 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதற்கு தன்னார்வலர்கள்தான் காரணம் என பேசி வந்த பவன்கல்யாண், மாநிலம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசியதாக நேற்று திடீரென ‘பல்டி’ அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆந்திராவில் கடும் எதிர்ப்பு எதிரொலி; பெண்கள் மாயமானதில் ஒட்டுமொத்த தன்னார்வலர்களையும் குற்றம் சாட்டவில்லை: நடிகர் பவன்கல்யாண் திடீர் ‘பல்டி’ appeared first on Dinakaran.

Tags : Bavanklyan ,Thirumalai ,Bhavangalayan ,Andhra Pradesh ,Andhra ,Bhavangalyan ,
× RELATED ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6...