×

சுற்றுச்சூழல் காத்திடும் காடுகள் உருவாக்கிட அலையாத்தி மரக்கன்றுகளை நடவு செய்தார் ஒன்றிய அமைச்சர் பேந்தர் யாதவ்

செங்கல்பட்டு: கடற்கரை கழிமுகப்பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழல் காத்திடும் அலையாத்தி காடுகள் உருவாக்கிட மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகளை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேந்தர் யாதவ் நடவு செய்து, தமிழ்நாடு அரசின் சதுப்பு நில மேம்பாட்டு முன்னெடுப்பு பணிகளை பாராட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இன்று (14.07.2023) கடற்கரை கழிமுகப்பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழல் காத்திடும் அலையாத்தி காடுகள் உருவாக்கிட மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகளை மாண்புமிகு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் அவர்கள் நடவு செய்தார்கள்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் இரண்டாவது அதிக பரப்பளவினை கொண்ட கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புயல் சீற்றத்தினை தடுத்திட அலையாத்தி காடுகள் மேம்பாடு மிகவும் பயனுள்ளதாகும். மிஷ்டி இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள கடற்கரை கழிமுகப்பகுதிகளான, உவர் நிலங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதிலும், புதியதாக அலையாத்தி மரக்கன்றுகளை வளர்ப்பதில் சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியதாகும் என்றும், அலையாத்தி காடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை, சமூக ஆர்வலர்கள், கடற்கரை பகுதி கிராம மக்கள், மாணவர்களை மாண்புமிகு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் அவர்கள் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை திருமதி சுப்ரியா சாகு இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாட்டின் கடற்கரை உவர்நிலங்களில் அலையாத்தி காடுகள் மிஷ்டி இயக்கம் மற்றும் ஈரநில இயக்கம் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக அளவு பரப்பளவில் அலையாத்தி காடு மரக்கன்றுகள் நடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், கார்பன் சமநிலை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சிறப்புச் செயலாளர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சந்திர பிரகாஷ் கோயல், உலக சுகாதார நிறுவன ஆலோசகராக செயல்பட்ட சௌமியா சுவாமிநாதன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் கௌ.கீதாஞ்சலி, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, சென்னை வன உயிரின காப்பாளர் ஈ.பிரசாந்த், மற்றும் கிராம பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

The post சுற்றுச்சூழல் காத்திடும் காடுகள் உருவாக்கிட அலையாத்தி மரக்கன்றுகளை நடவு செய்தார் ஒன்றிய அமைச்சர் பேந்தர் யாதவ் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Pender Yadav ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...