×

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 

கோவை, ஜூலை 14: குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவர் காமினி, ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தலை தடுக்க தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார காவல் படை போலீசாருடன் இணைந்து நேற்று பொள்ளாச்சியில் இருந்து மீன் கரை ரோடு, மோதிராபுரம் அருகே கண்காணித்து ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி வந்து கொண்டிருந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில், 50 கிலோ எடை கொண்ட 23 வெள்ளை மூட்டைகளில் மொத்தம் 1,150 கிலோ தமிழ்நாடு அரசின் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த சேகர் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சேகரர் சூலேஸ்வரன்பட்டி, மோதிராபுரம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் உள்ள கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

The post கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Coimbatore ,Civil Supplies Crime Investigation Department ,Chennai Police ,Kamini ,Dinakaran ,
× RELATED ரேசன் அரிசி பதுக்கியவர் கைது