×

பரமக்குடியில் 4.0 தொழில்நுட்ப மையம் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

 

பரமக்குடி, ஜூலை 14: பரமக்குடி,ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொழில் பயிற்சி மையங்களில் ரூ.103.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட, தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி பரமக்குடி நடைபெற்ற காணொளி காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசுவையில் பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தி மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 என்னும் தொழில்நுட்ப மையங்கள் தலா 34.65 கோடி மதிப்பீட்டில் மூன்று தொழில் பயிற்சி மையங்களிலும் 103.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முதல்வர் அதனை திறந்து வைத்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் பயிற்சியினை 312 மாணவ,மாணவிகள் பயன் பெறுவார்கள்.

இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் தங்கள் விருப்பத்திற்குரிய தொழில் கல்விகளை தேர்வு செய்து பயன்பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், எம்பி நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, நகர்மன்ற தலைவர்கள் சேது கருணாநிதி, கார்மேகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் குருதிமாறன், செல்வராஜ், அரசினர் தொழில் பயிற்சி மைய முதல்வர் குமரவேல், வேந்தோணி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை ராணி துரைராஜ் உள்ளிட்ட பொதுப்பணி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடியில் 4.0 தொழில்நுட்ப மையம் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,4.0 Technology Center ,Paramakudi ,Paramakkudi ,Ramanathapuram ,Mudugulathur ,technology ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...