×

மீன் பிடிப்பதில் மோதல் பழவேற்காடு மீனவர்கள் தர்ணா

பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் நடுவூர் மாதா குப்பத்தைச் சேர்ந்த இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. பலகட்ட சமாதான முயற்சியில் காவல்துறை, மீன்வளத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஒருதரப்பு மீனவர்களுக்கு ஒருசில மீனவ கிராமங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் ஒரே கிராமத்தில் இரு தரப்பு பிரச்னையில் மற்ற கிராமங்கள் தலையிடக் கூடாது என வலியுறுத்தியும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு நடுவூர் மாதா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தர்ணா செய்தனர்.பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் வருவாய் துறையினர் சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர்.

The post மீன் பிடிப்பதில் மோதல் பழவேற்காடு மீனவர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Palaverkadu ,Ponneri ,Madhuvur Mata Kuppa ,Palavekadu ,
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது