×

மாவட்ட வர்த்தக அணி தலைவராக நியமிக்கப்பட்ட சாட்சி சண்முகசுந்தரம் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாட்சி சண்முகசுந்தரம், எம்எல்ஏ சுந்தரை சந்தித்து வாழ்த்து பெற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக, காஞ்சிபுரத்தை சேர்ந்த சாட்சி ஜே.சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதைதொடர்ந்து சாட்சி சண்முகசுந்தரத்திற்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post மாவட்ட வர்த்தக அணி தலைவராக நியமிக்கப்பட்ட சாட்சி சண்முகசுந்தரம் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sanmukhasundaram ,MLA ,District Trade Team ,President ,Kanchipuram ,Saatchi Sanmukhasundaram ,Kanchipuram South District Trade Team ,Sundar.… ,Saatchi Sanmughasundaram ,trade team ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...