×

காஞ்சிபுரத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:காஞ்சிபுரம் – சென்னையின் பெருநகர எல்லைக்கு கொண்டுவரப்பட்டு, காஞ்சிபுரம் சென்னையில் ஒரு பகுதி. மேலும் காஞ்சிபுரம் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்கள் இருந்தும் வேலை விஷயமாக ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு குடிபெயர்ந்து வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரம், மருத்துவ சிகிச்சை, பொழுதுபோக்கு என ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இதனால், காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நேரடியாக மாநகர பேருந்து சேவை இல்லாததால், காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி அல்லது தாம்பரம் சென்று அங்கிருந்து மாநகர பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டி உள்ளதால், நேர விரையமும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகளும் மிகக் குறைவாக உள்ளதால், காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பேருந்து வசதியை நாடி உள்ள நிலையில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், காஞ்சிபுரத்துக்கு மட்டும் எம்டிசி என்னும் மாநகர பேருந்து இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை பெருநகர பரப்பளவு 1,189 சதுர கிலோ மீட்டர் இருந்து, 5,904 சதுர கிலோ மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் சென்னையின் மாநகர போக்குவரத்து கழக எல்லை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த, 50 கிலோ மீட்டர் பழைய நிலையிலே தற்போது வரை இருந்து வருகிறது.எனவே, சென்னை மாநகர போக்குவரத்து கழக எல்லை விரிவாக்கும் செய்தால்தான் காஞ்சிபுரத்துக்கு மாநகர பேருந்து சேவை கிடைக்கும்.

ஆகவே, சென்னை மாநகர போக்குவரத்து கழக எல்லை விரிவாக்கம் காஞ்சிபுரம் வரை செய்து சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு பகுதியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு மாநகர பேருந்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை பல்கலைக்கழகம், புரசைவாக்கம், சென்ட்ரல், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற வழித்தடங்களில் முதற்கட்டமாக எம்டிசி என்னும் மாநகர பேருந்து இயக்க தமிழ்நாடு முதல்வர், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post காஞ்சிபுரத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kangipuram ,Kanchipuram ,Chennai ,Kanchepuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு