×

கோவா சட்டசபை தேர்தலுக்கு ரூ.45 கோடி ஊழல் பணத்தை ஆம்ஆத்மி பயன்படுத்தியது: சிபிஐ துணை குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை ஊழல் பணத்தில் ரூ.45 கோடியை கோவா தேர்தலுக்கு ஆம்ஆத்மி பயன்படுத்தியது என்று குற்றப்பத்திரிகையில் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி கலால் கொள்ளை முறைகேட்டில் துணை முதல்வராக இருந்த சிசோடியா உள்பட பலரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்தவழக்கில் சிபிஐ நேற்று துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் தேர் மீடியா தயாரிப்பு நிறுவன இயக்குனர் ராஜேஷ் ஜோஷி, ஊழியர்கள் தாமோதர் பிரசாத் சர்மா, பிரின்ஸ் குமார், இந்தியா அகெட் நியூஸ் நிர்வாகிகள் அரவிந்த்குமார் சிங், ஆம்ஆத்மி தன்னார்வலர் சான்பிரித்சிங் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் கோவா தேர்தலுக்கு சட்டவிரோதமாக வந்த ரூ.44.54 கோடி பணத்தை ஆம்ஆத்மி பயன்படுத்தி உள்ளது. அந்த பணம் ஹவாலா முறையில் வந்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவா சட்டசபை தேர்தலுக்கு ரூ.45 கோடி ஊழல் பணத்தை ஆம்ஆத்மி பயன்படுத்தியது: சிபிஐ துணை குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : Amadmi ,Goa assembly elections ,CPI ,New Delhi ,CBI ,Delhi ,Goa elections ,Goa Assembly ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...