×

தாம்பரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.31 ஆயிரத்து 500 அபராதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.31 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், 4வது மண்டலத்துக்கு உட்பட்ட அப்துல் ரசாக் தெரு, சண்முகம் சாலை மற்றும் தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில், மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 15 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால், 15 கடைகளுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.31 ஆயிரத்து 500 அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மொத்த விற்பனை கடை குடோன் கண்டறியப்பட்டு அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்த்து சுமார் 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா மாநகராட்சியினை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

The post தாம்பரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.31 ஆயிரத்து 500 அபராதம் appeared first on Dinakaran.

Tags : TAMBARI ,Thambaram Corporation ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...