×

புளியங்குடியில் சாலை, வாறுகால் அமைக்க நிதியுதவி

புளியங்குடி, ஜூலை 14: புளியங்குடியில் சாலையை சீரமைக்கவும், வாறுகால் அமைக்கவும் நிதியுதவி வழங்க கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம், நகர் மன்ற சேர்மன் விஜயா கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கூறுகையில், ‘புளியங்குடி நகராட்சி சார்பில் நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் புதிதாக சாலைகள் போடப்பட்டு, பொது கழிப்பிடங்கள் சீரமைக்கப்படுகிறது. புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போது வாறுகால் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புளியங்குடி நகராட்சிக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அமைச்சரும் உடனடியாக நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்’ என்றார்.

The post புளியங்குடியில் சாலை, வாறுகால் அமைக்க நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Bleyankudi Road ,Skirkal ,Pleyangudi ,Minister ,K.K. N.N. Neruvadu ,Bellingudi Road, ,
× RELATED புளியங்குடி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்