×

திமிங்கல எச்சம் வைத்திருப்பது குற்றமா? அரசு விளக்கமளிக்க நீதிபதி உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த தர்மராஜ், அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் வைத்திருந்ததாக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளைநீதிபதி ஜி.இளங்கோவன், ‘‘மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி திமிங்கலம் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் திமிங்கலம் வாய் வழியாக உமிழக்கூடிய அம்பர்கிரிஸ் என்ற எச்சத்தை வைத்திருப்பது சட்டப்படி குற்றமா என்பது குறித்து, வனத்துறையிடம் விளக்கம் பெற்று அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26க்கு தள்ளி வைத்தார்.

The post திமிங்கல எச்சம் வைத்திருப்பது குற்றமா? அரசு விளக்கமளிக்க நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gov. ,Madurai ,Dharmaraj ,Virudunagar district ,Thiruvilliputtur ,Amber Kris ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை