×

போலி பேஸ்புக் கணக்கில் படத்தை வைத்து முன்னாள் டிஜிபி ரவியின் பெயரை சொல்லி பர்னிச்சர் கடையில் மோசடி: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

சென்னை: தமிழ்நாடு காவல்துறை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர் டிஜிபி ரவி. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார். ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி, அதில் தினமும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் டிஜிபி ரவியின் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலியாக உருவாக்கிய பேஸ்புக் பக்கத்தில் ஒரு கணக்கு தொடங்கியுள்ளனர். அந்த கணக்கு வழியாக மெசென்ஜரில் முன்னாள் டிஜிபி ரவியின் நண்பர்களுக்கு மர்ம நபர்கள் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினர். அதில், வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்குமாறு பரிந்துரை செய்தது போல் அனுப்பி உள்ளனர். அதை உண்மை என்று நம்பி அவரது நண்பர் பர்னிச்சர் பொருட்கள் வாங்க மோசடி நபர்களிடம் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் டிஜிபி ரவிக்கு அவரது நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. உடனே முன்னாள் டிஜிபி ரவி சைபர் க்ரைம் காவல் துறையில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

The post போலி பேஸ்புக் கணக்கில் படத்தை வைத்து முன்னாள் டிஜிபி ரவியின் பெயரை சொல்லி பர்னிச்சர் கடையில் மோசடி: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Facebook ,DGB ,Chennai ,TGB Ravi ,Tamil Nadu Police Tambaram ,Tamil Nadu Police ,DGB ravi ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...