×

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் ஆனந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தி 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக அவர்கள் பயிலும் வகுப்பு, படிப்பிற்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.7 ஆயிரம் வரை கடந்த 2013-2014ம் நிதி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிய அறிவிப்பினை தொடர்ந்து, மாற்றுத்திறன் மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை அவரவர் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்றவாறு இரண்டு மடங்காக உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கு ரூ.14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது.அதன்படி 2023-2024ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000 வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.6 ஆயிரம், 9 முதல் 12ம் வகுப்பு வரை ரூ.8 ஆயிரம், பட்டப்படிப்புக்கு ரூ.12 ஆயிரம், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம் ரூ.14 ஆயிரம் கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary of the ,Department of Disabled ,Persons ,Anandakumar ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு 5%...