×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்துகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டயாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக மொத்தம் 20 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலகத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய்த்துறை, நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stal ,District Collectors ,CHENNAI ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம்...