×

தண்டுக்கீரை

தண்டுக்கீரை கடையல்

தேவையான பொருட்கள்

தண்டுக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 6
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – கால் கப்
புளி – நெல்லிக்காய் அளவு.
வறுத்து அரைக்க
தனியா – அரை டேபிள் ஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். இதனை தேங்காய்த்துருவலுடன் அரைத்து வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய தண்டுக்கீரையை சேர்த்து வதக்கவும். இப்போது மிளகாய்த்தூள், அரைத்த விழுது மற்றும் தேவையான புளித்தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். தண்டுக்கீரை வெந்து, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

தண்டுக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

தண்டுக்கீரை – 1 கட்டு
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

கீரையை நன்றாகக் கழுவி தண்ணீரை நன்கு வடித்துவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் வெட்டி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும், பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கீரை வேகும் வரை நன்றாகக் கிளறவும். கீரை வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இப்போது சுவையான தண்டுக்கீரை தயார். இதை சாம்பார், ரசம் என எந்த குழம்பு வகையுடன் சேர்த்து பறிமாறலாம். சுவை அள்ளும்.

The post தண்டுக்கீரை appeared first on Dinakaran.

Tags : Arthouse ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் அணி இன்று ஆலோசனை