×

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே கோழி பண்ணைக்குள் புகுந்த வெள்ளத்தால் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே கோழி பண்ணைக்குள் புகுந்த வெள்ளத்தால் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடங்கி அதிகாலை வரை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக கெடார் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள பல்வேறு நீர் வாய்க்கால்களில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கெடாரிலிருந்து சித்தாமூர் ஏரிக்கு செல்லும் வரப்பு வாய்க்காலில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வாய்க்காலை ஒட்டியுள்ள கோழி பண்ணைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கெடார் மற்றும் காக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு கோழிப்பண்ணைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த சுமார் 3000க்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது. உயிரிழந்த கோழிகளை பண்ணைக்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்தனர்.

The post விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே கோழி பண்ணைக்குள் புகுந்த வெள்ளத்தால் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Kedar ,Villupuram ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர்...