×

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை சாகுபடிக்கு தர கரும்பு விவசாயிகள் கோரிக்கை..!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை பாசன நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்பு பயிரிடுவோர் விவசாயிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் அருகே சேதீயா தோப்பில் நடைபெற்றது. இதில் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை பாசன நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் செயல்படுத்தப்பட்டது.

குறிப்பாக என்.எல்.சி நிறுவனத்தை சுற்றியுள்ள தர்மநல்லூர், தட்டானோடை, முகந்தெரியான் குப்பம், ஆதனூர், அகர ஆலம்பாடி, அம்மன்குப்பம், எறும்பூர், சின்னநற்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராம விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.என்.எல்.சி நிறுவனத்திலிருந்து பெருமாள் ஏரி மூலம் பரவனாற்றின் வழியாக பல்லாயிர கனஅடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதை இந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் மாற்று திட்டம் அமைத்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

The post நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை சாகுபடிக்கு தர கரும்பு விவசாயிகள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Naiveli N. l. ,CDC ,Cuddalore ,Naiveli ,Dinakaran ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்