×

தீவைத்ததால் டூவீலர் எரிந்து சேதம்

 

கமுதி, ஜூலை 13: கமுதி அருகே கீழக்கொடுமலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகூரான்(56). இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். நேற்று பார்த்த போது, மர்ம நபர்கள் இவரது இருசக்கர வாகனத்தின் மீது தீ வைத்து எரித்தது தெரிய வந்தது, இதனால் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது. இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் நாகூரான் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தீவைத்ததால் டூவீலர் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Nagooran ,Keezakodumalur ,
× RELATED கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்...