×

கார் மோதி வாலிபர் படுகாயம்

 

பெரியகுளம், ஜூலை 13: பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (22). இவர், பெரியகுளம் தென்கரை தீயணைப்பு நிலையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வடுகபட்டியில் பொருட்களை டெலிவரி செய்துவிட்டு மீண்டும் அலுவலகம் வருவதற்காக பெரியகுளம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

வடுகப்பட்டி-பெரியகுளம் மெயின் ரோட்டில் அட்டை கம்பெனி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் விஜய் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

The post கார் மோதி வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Vijay ,Devadanapatti ,Periyakulam Tenkarai fire department ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...