திருவில்லிபுத்தூர், ஜூலை 13: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது தேரில் குதிரை சிலைகள் உட்பட பல்வேறு சிலைகளை வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அய்யனார் கூறுகையில், தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மீதி 5 சதவீத பணிகள் உள்ளது. அதுவும் ஒரு சில நாளில் நிறைவடைந்து விடும். தேரில் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. 16 சப்பர வண்டி தேரையும் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.
The post தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் தேரில் சிலைகள் வைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.
