×

கழுகூர் மகா மாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம்

 

தோகைமலை, ஜூலை 13:தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி கழுகூரில் செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 24ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 47 நாட்கள் தினந்தோறும் செல்வவிநாயகர் மற்றும் மகா மாரியம்மனுக்கு மண்டல அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வந்தனர். நேற்று 48 வது மண்டல அபிஷேக விழா ஊர் பொதுமக்கள் சார்பாக நடந்தது.

இதில் கோயில் முன்பாக சிறு யாக குண்டம் அமைத்து விநாயர் வழிபாடு, கணபதி ஹோமம் சிறப்பு அர்ச்சனைகள் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செல்வவிநாயகர், மகா மாரியம்மனுக்கு பால், நெய், திருநீறு, குங்குமம், திருமஞ்சனம், பழங்கள், தேன், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வவிநாயகர், மகாமாரியம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாதாரனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த 48வது மண்டல அபிசேக விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர் அமைப்பினர் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனர்.

The post கழுகூர் மகா மாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kagalgur ,Maha ,Mariamman Temple ,Mandalabishek ,Thokaimalai ,Selvavinayakar ,Maha Mariamman Temple ,Kalkoor Panchayat Kalkoor ,
× RELATED சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா