×

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தில் இடம்பெறும் கொடியின் நிறத்தை மாற்றிய பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும்: தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாவீரன் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமென்று தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கு தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன்ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், படத்தில் வில்லன் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய ஜனநாயக கட்சி தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் வி.வெங்கடேசன் ஆஜரானார். சாந்தி டாக்கீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகினர்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, படத்தை நீதிபதி பார்த்தார். இதன்பின், எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என்று படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 விநாடிகள், படம் முடியும் போது 10 விநாடிகளும் காட்ட வேண்டும். படத்தில் வரும் காட்சிகள் கற்பனையானது என்ற அறிவிக்க வேண்டும். காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களிலும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

The post சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தில் இடம்பெறும் கொடியின் நிறத்தை மாற்றிய பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும்: தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sivakarthykeyan ,Marveeran ,Chennai ,Oditi ,Satellite Channel ,Kavieran ,Kaviran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...