×

நேபாள பிரதமரின் மனைவி மறைவு

காத்மண்ட்: நேபாள பிரதமர் பிரசந்தாவின் மனைவி சீதா தஹால் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். நேபாள பிரதமர் பிரசந்தாவின் மனைவி சீதா தஹால்(69). கடந்த சில நாட்களாக சீதா தஹால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்றுஅவரது உடல்நிலை மோசமானதை அடுத்து காத்மண்ட்டில் உள்ள நோர்விக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரதமர் பிரசந்தாவின் மனைவி சீதா தஹால் மறைவுக்கு நேபாளம் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post நேபாள பிரதமரின் மனைவி மறைவு appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Sita Dahal ,Prime Minister Prasanda ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...