×

நீலமங்களம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் ₹66.36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்

செய்யூர், ஜூலை 13: நீலமங்களம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில், ₹66.36 லட்சம் மதிப்பீல் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் நீலமங்களம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பரசுராமன வரவேற்றார். விழாவில், ‘பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு அம்மனுக்களை பரிசீலனை அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அதனை தொடர்ந்து, ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதன்படி, ₹66 லட்சத்து 36 ஆயிரத்து 687 மதிப்பில் சாலை விபத்து மரணத்திற்கான நிவாரணம், இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகள், தொழில், சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள், கூட்டுறவு, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறை மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சகீதா பர்வீன், மதுராந்தகம் ஆர்டிஓ தியாகராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், செய்யூர் தாசில்தார் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நீலமங்களம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் ₹66.36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Human Justice Day Camp ,Neelamangalam Village ,Rahul Nath ,Seyyur ,
× RELATED செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டராக அருண்ராஜ் இன்று பொறுப்பேற்பு