×

நியமித்த கட்சியின் கொள்கையை பேசுகிறார் முதல்வர் கூறுவதைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும்: அன்புமணி பேட்டி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று அளித்த பேட்டி: மேகதாது விவகாரத்தில் கர்நாடகா, சட்ட பேரவையில் அணை கட்ட போகிறோம் என கூறிவருகிறது. இரண்டு மாநில நல்லுறவை கெடுக்கும் வகையில் கர்நாடகா முதல்வரும், துணை முதல்வரும் பேசி வருகின்றனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். நீர் பங்கீட்டில் நடுவர் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்க வேண்டும். நாங்கள் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை நியமித்த கட்சியின் கொள்கைகளை பேசி வருகிறார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கூறுவதைதான் ஆளுநர் கேட்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர வேறு எதுவும் அவர் பேசக்கூடாது என்றார்.

The post நியமித்த கட்சியின் கொள்கையை பேசுகிறார் முதல்வர் கூறுவதைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும்: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,Anbumani ,Trichy ,PMK ,Meghadatu ,Karnataka ,Legislative Assembly ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து