×

ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440

ஹார்லிடேவிட்சன் நிறுவனம், எக்ஸ் 440 என்ற புதிய குரூசர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில், டெனிம், விவிட் மற்றும் எஸ் என 3 வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக டெனிம் சுமார் ரூ.2.29 லட்சம், விவிட் சுமார் ரூ.2.49 லட்சம், எஸ் சுமார் ரூ.2.69 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 440 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 27 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 38 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என, அராய் சான்றளித்துள்ளது. 4 வண்ணங்களில் கிடைக்கும். வட்ட வடிவ ஹெட்லைட், சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள் இடம் பெற்றுள்ளன. டிரையம்ப் ஸ்பீடு 400க்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 appeared first on Dinakaran.

Tags : Harley Davidson ,HarleyDavidson ,Cruzer ,Dinakaran ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...