×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி, ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24. ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20. தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16. பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18. 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த கோயில்களின் அலுவலகத்திலோ, இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களை https://hrce.t*.gov.i* என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி, ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Hindu Religious Fisheries ,Segarbabu ,Archekar Training Schools ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...