×

ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களிள் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று அளித்த பேட்டி: 2017ம் ஆண்டில் அமலாக்கத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி சட்டங்களின் நுணுக்கங்கள் இன்றளவில் பெரும்பான்மையான அரசு அதிகாரிகளே அறிந்திருக்கவில்லை. வணிகர்கள் பலமடங்கு அபராதம் செலுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில், அகில இந்திய வணிக சம்மேளனத்தின் பங்கேற்புடன் தலைநகர் டெல்லியில் உரிய ஆலோசனைக்குபின் போராட்டத்தை முன்னெடுத்து, களம் அமைத்திட தயாராக இருக்கிறது.

The post ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Government ,Wickramaraja ,Chennai ,Tamil Nadu Chamber of Commerce Association ,President ,AM Wickramaraja ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...